6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு தேதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


6 முதல் 9 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடைபெறும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அனைத்து வகை பள்ளிகளுக்கும் அனுப்பி உள்ள  சுற்றறிக்கைகள், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆளுகைக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும், சென்னை பள்ளிகள், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னை மாவட்ட தேர்வுக் குழுவின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இதில் 6,7 வகுப்புகளுக்கான மூன்றாவது பருவத்தேர்வு மற்றும் 8, 9-ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வு அடுத்த மாதம் 5-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதன்படி, 5ஆம் தேதி தமிழ் பாடம், 7ஆம் தேதி ஆங்கில பாடம், 9ஆம் தேதி விருப்பப்பட்ட மொழித் பாடம், 10ஆம் தேதி கணிதம், 11ஆம் தேதி அறிவியல் பாடம், 12ஆம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடைபெற உள்ளது. 

பிற்பகல் 1.45 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வுக்கான நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பத்து நிமிடம் விடைத்தாளை படிப்பதற்கு, அடுத்த பத்து நிமிடம் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்வதற்கு, அதன் பின்னர் மூன்று மணி நேரம் தேர்வு எழுதுவதற்கு நேரம் ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

6 to 9th class exam date


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->