கூட்டுறவுத் துறையில் வேலை - புது அப்டேட் கொடுத்த அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட முப்பத்திரண்டு தேர்வர்களுக்கு சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் பணியாணைகளை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நேற்று வழங்கினார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கூட்டுறவுத்துறையில் ஏற்கெனவே முப்பத்திரண்டு மாவட்டங்களில் விற்பனையாளர்கள், கட்டுனர்கள் என்று மொத்தம் 5,500 காலிப்பணியிடங்களை நிரப்ப 4.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

நேர்முகத் தேர்வுக்கு பிறகு, தகுதியானவர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது. முப்பத்தாறு மாவட்டங்களில் இந்த தேர்வுப்பணிகள் சிறப்பாக நடைபெற்ற நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் குறைகள் காரணமாக, வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கூட்டுறவு சங்க உதவியாளர்கள் தேர்வு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விவரம் தெரியாமல் கூறியுள்ளார். கூட்டுறவுத் துறையில் பணியாளர்களைத் தேர்வு செய்ய தனிச்சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின் படியே அனைத்தும் பின்பற்றப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மூலம் தேர்வு நடைபெறுவதற்கான அறிவிப்புகள் ஒளிவு மறைவு இல்லாமல் நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எழுபது லட்சம் பேர் பதிவு செய்திருந்துள்ளனர். அவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யாதவர்களும் கூட இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் எந்தவித தடையும் இல்லை" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5500 job vacancis in Co operative department


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->