தமிழில் படித்தவர்களுக்கு 20% முன்னுரிமை – அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியிடங்களுக்கு நடைபெறும் நேரடி நியமனங்களில், தமிழ் வழியில் கல்வி பெற்றவர்களுக்கு 20% பணியிடங்கள் ஒதுக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

பணிநியமனத்துக்கான தேர்வுகளில், மற்ற மொழிகளில் கல்வி பெற்று தமிழில் தேர்வு எழுதியவர்கள், தனித்தேர்வாளர்கள் ஆகியோர் இந்த முன்னுரிமைக்குத் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு, தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களே நியமிக்கப்பட வேண்டும் என்றும், வேறு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் தகுதி இல்லை என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், தமிழ் மொழி தெரியாதவர்கள் அரசு பணியில் சேரும் நிலையை தவிர்க்க, அரசு திடமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பலர் வலியுறுத்திய புகார்களை அடுத்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

பணியாளர் தேர்வு முகமைகள் மற்றும் பணி நியமன அலுவலர்கள், கல்வித் தகுதி சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை சரிபார்த்து, உரியவர்கள் என்றே உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 20% முன்னுரிமை ஒதுக்கீடு, நேரடி நியமன தேர்வுகளின் அனைத்து நிலைகளிலும் – முதற்கட்டம், முதன்மை தேர்வு, நேர்முகம் என அனைத்திலும் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும், மொத்தம் 12 வகையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 preference for those educated in Tamil Government releases new guidelines


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->