தமிழகத்தில் உள்ள பழமையான குகை கோவில்!! எங்கு உள்ளது தெரியுமா?! - Seithipunal
Seithipunal


பழமையான கோயில்கள் என்றாலே, அந்தக் கோயிலில் எங்கும் கல்வெட்டுகள் நிறைந்திருக்கும். குறிப்பாக, கருவரையைச் சுற்றிலும், கருவரையின் உட்பகுதியிலும், கல்வெட்டுகள் அதிகம் காணப்படும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான் மலை, சிகாநாதர் ஆலயத்தில் காணும் இடமெல்லாம், கல்வெட்டுக்கள், விரவிக் கிடக்கின்றன. மொத்தம் 120 கல்வெட்டுகள் இந்தக் கோயில் வளாகத்தில் உள்ளன.

இந்தக் கோயிலுக்கு, பாண்டிய மன்னர்களின் காலம் முதல், சீரமைத்த தொண்டைமான்களின் ஆட்சிக் காலம் வரையிலுமான, கால கட்டத்தில், இந்தக் கோயிலுக்கு தானமாக நிலங்களை வழங்கியவர்களின் விபரங்கள், நடைபெற்ற திருப்பணிகள் பற்றிய விபரங்கள் எல்லாம், அந்தந்த கால கட்டத்தில் தவறாமல், கல்வெட்டாகப் பொறிக்கப் பட்டுள்ளன.

பிற்காலப் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், இந்தப் பகுதியை, கங்கையரையர், வாணதிராயர் ஆகியோர் ஆட்சி செய்து வந்துள்ளனர்.

விஜயநகர மன்னர்களான, வீரகம்பண உடையார், கோபதிம்மா ஆகியோரது பெயர்களும் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன. 

விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளான, மதுரை நாயக்க மன்னர்களின் காலத்தில், இந்தப் பகுதி எல்லாம், மருங்காபுரி சிற்றரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. இவர்களுக்குப் பிறகு, வைத்துார் பல்லவராயர் இந்தப் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர்.

சிவந்தெழுந்த பல்லவராயர், இந்தக் கோயிலில் உள்ள சில மண்டபங்களைக் கட்டிக் கொடுத்துள்ளார். இன்றும் அந்த மண்டபங்கள் எல்லாம், அவரது பெயரில் தான் உள்ளன. 

ரகுநாதத் தொண்டைமான் குகைக்கோயிலுக்கு முன்பாக உள்ள மண்டபத்தைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். இந்த மண்டபத்திற்கான படிக்கட்டுகளை, விஜயரகுநாத தொண்டைமான் அமைத்து தந்துள்ளார்.

இந்த அரிய செய்திகள் எல்லாம், இங்குள்ள கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Specialities of pudhukottai kudumiyan kovil


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->