பண ஆசை.. நண்பர்களுடன் உல்லாசம்- கணவன் மீது மனைவி பரபரப்பு புகார்!
Money desire Fun with friends Wifes sensational complaint against husband
பணம் சம்பாதிக்க ஆண் நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கி பணம் சம்பாதித்த கணவன் கைது செய்யப்பட்டான்.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் , கணவருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், கட்டிட தொழிலாளியான கணவர் பணத்தாசையை தூண்டி விட்டு மனைவியை வலுக்கட்டாயமாக இருக்க வேண்டும் என கணவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது விருப்பத்திற்கு மாறாக அந்த பெண் கணவர் கூறியபடி வேறு நபரிடம் உல்லாசமாக இருந்ததனை கணவர் வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார்.
இந்தநிலையில், கணவரின் தொல்லை தாங்க முடியாமல் மனைவி அவருக்கு தெரிந்த காவூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரரான சந்திரநாயக்கிடம் இதுகுறித்து தெரிவித்தார். இதையடுத்து கணவர் செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்களை அழித்தார் போலிஸ் காரர் .அதன்பிறகு சந்திரநாயக், அந்த பெண்ணின் கணவர் அனுமதியுடன் பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில், இதுகுறித்து கங்கனாடி போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கட்டிட தொழிலாளி சரியாக வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து மனைவியை வைத்து பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். அதன்படி, ஆண் நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கி பணம் சம்பாதித்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனால் சம்பவம் குறித்து தனக்கு தெரிந்த போலீஸ்காரர் சந்திரநாயக்கிடம் அந்த பெண் தெரிவித்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட போலீஸ்காரரும் பெண் மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார் . இந்த சம்பவம் தொடர்பாக கங்கனாடி போலீசார் சந்திரநாயக், மற்றும் பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர்.
English Summary
Money desire Fun with friends Wifes sensational complaint against husband