உலர் பசுமைமாறா காடுகளில்... கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்..! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரையையொட்டி அமைந்துள்ள கோடியக்கரை காட்டுயிர் உய்விடம் 1967ஆம் ஆண்டு கலைமான்களைக் காப்பதற்காக உருவாக்கிய வனஉயிரின உய்விடம் ஆகும். 

இது நாகப்பட்டினத்தில் இருந்து 65கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 117கி.மீ தொலைவிலும், வேதாரண்யத்தில் இருந்து 16கி.மீ தொலைவிலும் உள்ளது. இதன் பரப்பளவு 17.26 சதுர கி.மீ ஆகும்.

சிறப்புகள் :

இந்தச் சரணாலயத்தில் பல்வேறு விதமான கடல் பறவைகளும் காணப்படுகின்றன. வேறு நாடுகளிலிருந்து வலசை வரும் பறவைகளுக்கான புகலிடமாகவும் இது திகழ்ந்து வருகிறது. 

இங்கு காணப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த சதுப்புநிலங்களில் பல்வேறு வகையான அரிய பறவையினங்களைக் காணலாம். இங்கு நரி, புள்ளிமான் போன்ற விலங்குகளையும் காணலாம்.

ஆங்கிலேயர்களால் வளர்க்கப்பட்டு பின்னர் விட்டுவிடப்பட்ட வளர்ப்புக் குதிரைகள் நாளடைவில் அடங்காமல் சுற்றித்திரியும் தான்தோன்றிக் குதிரைகளாக மாறிவிட்டன. இத்தகைய குதிரைகள் இங்கு காணப்படுகின்றன.

இங்கு 1000 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்துக் கலங்கரை விளக்கம் ஒன்று காணப்படுகிறது.

இப்பகுதியின் காடுகள் வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள் ஆகும். இக்காப்பகத்தில் 150 வகையான தாவர வகைகள் காணப்படுகின்றன.

கலைமான், நரி, புள்ளிமான், காட்டுப்பன்றி, முயல், காட்டுக் குதிரைகள், ஆமை, குரங்கு போன்ற விலங்குகள் உள்ளன.

இவை தவிர இங்கு நூற்றுக்கும் கூடுதலான பறவை இனங்கள் காணப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

point calimere wildlife and bird sanctuary


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->