பெண்கள் அணியும் கண்ணாடி வளையலுக்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் அடங்கி உள்ளதா? - Seithipunal
Seithipunal


காலம் காலமாகவே நம் முன்னோர்கள், பெண்கள் வளையல் அணிந்து கொள்ளாமல் இருக்கக்கூடாது என்று கூறி வருகின்றார்கள். அதுவும் சுமங்கலிப் பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் கையில் கண்டிப்பாக வளையல் அணிந்திருக்க வேண்டும். 

பெண்கள் வளையல் அணிந்து கொள்ளாமல் இருந்தால் அது அமங்கலம் என்பதையும் சாஸ்திரம் கூறுகின்றது. வளையல்களில் எத்தனையோ வகையான வளையல்கள் இருந்தாலும் இந்த கண்ணாடி வளையலுக்கென்று ஒரு தனி சிறப்பு உண்டு.

அந்த காலங்களில் எல்லாம் நம் வீடுகள் அமைதியாக இருக்கும் நேரங்களில் பெண்களின் கைகளில் இருக்கும் கண்ணாடி வளையலில் இருந்து வரும் ஒலியானது நம் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கும்.

ஆனால் இந்த காலத்தில் சில பெண்கள் கண்ணாடி வளையல் அணியும் பழக்கத்தை குறைத்துக் கொண்டார்கள். வீட்டில் நேர்மறை ஆற்றல் ஏற்படுவதற்காக கடைகளில் விற்கும், ஒலியெழுப்பும் கருவிகளை வாங்கி தொங்க விடுகிறார்கள்.

பெண்கள் கண்ணாடி வளையலை அணிந்து கொண்டால் இந்த செயற்கையான ஒலியெழுப்பும் கருவிகள் நம் வீட்டிற்கு தேவைப்படாது.

அடுத்ததாக பெண்களுக்கு, கர்ப்ப காலங்களில் வளைகாப்பு நடத்தும் போது ஒரு முக்கிய பங்கு வகிப்பது இந்த வளையல்கள் தான். கர்ப்பிணிப் பெண்களுக்கு நாம் அணிவிக்கப்படும் வளையல் ஒரு காப்பாக, அதாவது கர்ப்பிணிப் பெண்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காகவே அணிவிக்கப்படுகிறது.

இதன் மூலமாகத்தான் இதற்கு வளைகாப்பு என்ற பெயரே வந்தது. இந்த கண்ணாடி வளையலில் இருந்து எழுப்பப்படும் சத்தம் குழந்தைக்கு நேர்மறை ஆற்றலை உண்டாக்குமாம். கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.

இந்த கண்ணாடி வளையலில் ஓசை இருந்தால் பெண்களிடம் தீய சக்திகள் அண்டாது. கண் திருஷ்டியும் அண்டாது. நம் வீட்டில் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்திருக்கும்.

உடைந்த கண்ணாடி வளையல்களை பெண்கள் அணிந்து கொள்ளக்கூடாது. அந்த உடைந்த விரிசலின் மூலம் கெட்ட சக்திகள் ஊடுருவும் என்பது நம் முன்னோர்களின் கூற்று.

உங்கள் வீட்டில் இருக்கும் எந்தவொரு கண்ணாடி பொருள் உடைந்தாலும், கடவுளின் ஆசியினால் உங்கள் வீட்டில் இருந்த தீய சக்திகளும், கண் திருஷ்டியும் மறைந்துவிட்டது என்பதை குறிக்கின்றது.

இதனால் உடைந்த கண்ணாடி பொருட்களை நினைத்து மன வருத்தம் கொள்ள வேண்டாம். நீங்கள் நாகரிக வளர்ச்சியினால் கண்ணாடி வளையல் அணியாமல் உள்ளவர்களாக இருந்தால், உங்களின் குடும்ப நலனிற்காக வரும் நாட்களில் கண்ணாடி வளையல் அணியும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில் எந்தவொரு தவறும் இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bangles special


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal