திருவிழாவில் நேர்ந்த பேரிழப்பு...! பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருந்த போதே மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்த கலைஞர்....!
Tragic loss at festival Artist dies after collapsing stage while performing Bharatanatyam
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பாலாழி பகுதியைச் சேர்ந்த ஷாஜுவின் மனைவி, 52 வயதுடைய ஷைனி, சிறந்த பரதநாட்டிய கலைஞராகப் பரிச்சயமானவர். சிரைக்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில், அவர் தனது நடனத் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

ஆனால், மேடையில் ஆனந்தமாய் ஆடியுக் கொண்டிருந்த அந்த தருணமே திடீரென சோகமாக மாறியது. நடனத்தின் நடுவே ஷைனி திடீரென மயங்கி விழுந்தார்.
இதைக் கண்டு பதற்றமடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, கோழிக்கோட்டிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், மருத்துவர்களின் அனைத்து முயற்சிகளும் பலனளிக்காமல், ஷைனி உயிரிழந்தார். இந்த துயரச் செய்தி கலை உலகத்தையும் பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பன்னிரங்காவு காவலர்கள் விரைந்து வந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த திடீர் மரணம் குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Tragic loss at festival Artist dies after collapsing stage while performing Bharatanatyam