படுக்கையறையில் கேமரா... கணவன் மீது மனைவி கொடுத்த பகீர் புகார்! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் மனைவியின் அனுமதி இன்றி ரகசிய கேமரா வைத்து அவளது தனிப்பட்ட தருணங்களை பதிவு செய்த கணவருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புட்டேனஹள்ளியை சேர்ந்த 27 வயது பெண் போலீசில் அளித்த புகாரில், தன்னைச் சேர்ந்த சையத் இனாமுல் (35) என்பவருடன் கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் நடந்ததாக கூறியுள்ளார். திருமணத்தின் போது 340 கிராம் நகை மற்றும் இருசக்கர வாகனமும் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு கணவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும், இதுகுறித்து கேட்டபோது தன்னை தாக்கியதும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

மேலும், படுக்கையறையில் ரகசிய கேமரா வைத்து தனது தனிப்பட்ட தருணங்களை வீடியோவாக பதிவு செய்ததையும், 19 பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்ததையும் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோக்களை வெளிநாடுகளில் உள்ள தனது நண்பர்களுடன் பகிர்ந்ததோடு, அவர்கள் பெங்களூருவுக்கு வந்தபோது அவர்களுடன் தன்னை உறவு கொள்ள வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு மறுத்ததால், கணவரும் அவரது பெற்றோரும் தன்னை தாக்கி தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், சையத் இனாமுல் மற்றும் அவரது பெற்றோர்கள் உட்பட நால்வருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான சையத் இனாமுலை தேடிவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bangaliore bed room camera husband wife


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?


செய்திகள்



Seithipunal
--> -->