ஆந்திராவில் அதிர்ச்சி: 03 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று புதரில் வீசிய வாலிபர்..! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம், மைலாவரம் மண்டலத்தில் உள்ள கிராமத்தில் வழிபாட்டு தளம் உள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், ஜம்மலமடகு மண்டலம் மொரகுடி கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

அப்போது புரோதட்டூர் மண்டலம் அம்ருதநகர் கிராமத்தை சேர்ந்த தம்பதி தனது 03-வயது மகளுடன் கலந்துகொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சியில் மொரகுடி கிராமத்தை சேர்ந்த 26 வயதுடைய ரகமத்துல்லா என்பவன், சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

நேற்று மணமக்களுக்கு திருமணம் முடிந்த சில நிமிடங்களில் சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது வழிபாட்டு தலத்திற்குள் வந்த ரகமத்துல்லாவிடம் சிறுமி குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளான். அத்துடன், அவரது சட்டையில் ரத்தக்கறையும் இருந்துள்ளது. அதுகுறித்து அங்கிருந்தவர்கள் கேட்டபோது அவர் தப்பியோட முயன்றுள்ளான், உடனே அங்கிருந்தவர்கள் சுதாகரித்து கொண்டு அவனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

பின்னர் அவனுடை விசாரித்தத்தில் அவன் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளான். அதாவது, 03 வயது சிறுமியிடம் நைசாக பேசி மறைவான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளான். அத்துடன் அந்த சிறுமியை பலாத்காரம் செய்து, பின்னர் சிறுமியை அடித்து கொலை செய்து, பக்கத்தில் உள்ள புதரில் வீசியுள்ளான்.

இதைகேட்டு கதறிய சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று புதரில் கிடந்த சிறுமியின் சடலத்தை மீட்ட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்து ரகமத்துல்லாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young man raped killed and dumped a 3 year old girl in Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->