ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் இளைஞர்கள் மோதல்!...அடிதடியில் ஈடுபட்ட இளைஞர்களின் வீடியோ வைரல்! - Seithipunal
Seithipunal


ராப் பாடகராக அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி, திரைத் துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இதற்கிடையே தனி ஒருவன், ஆம்பள, அரண்மனை உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்த நிலையில், மீசையை முறுக்கு, நான் சிரித்தால், நட்பே துணை, சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் நடிகராக நடித்துள்ளார்.

இந்த நிலையில், 'ரிட்டர்ன் ஆப் தி டிராகன்' என்ற பெயரில் லண்டன், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இசைக் கச்சேரி நடத்தி வரும் இவர், தற்போது கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் 300 அடி ரேம்ப் அமைத்து இசைக் கச்சேரியை நடத்தி உள்ளார்.

அப்போது ஹிப் ஹாப் ஆதி பாடல் பாடிக்கொண்டிருந்தபோது இருத்தரப்பு இளைஞர்களிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடிதடியில் ஈடுபட்ட இளைஞர்களை அழைத்து சென்றனர்.

தற்போது இளைஞர்கள் அடித்துக் கொண்ட காட்சி வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இளைஞர்கள் இதுபோன்ற இசை நிகழ்ச்சியில் அதிகம் கூடும்போது பிரச்னைகள் எழுவதாக பார்வையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youths clash at hip hop adis concert


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->