‘உங்களின் நேர்மையே எனக்குச் சொத்து'...! தந்தை இழப்பில் துயரம்: சித்தார்த் மல்ஹோத்ரா குடும்பத்தில் சோகம்....!
Your honesty my asset Grief over loss his father Sadness Sidharth Malhotra family
பிரபல இந்தி திரைப்பட நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா அவர்களின் தந்தை சுனில் மல்ஹோத்ரா (50), நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி டெல்லியில் அவர் உயிரிழந்ததாக, சித்தார்த் மல்ஹோத்ரா தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் ரசிகர்களிடம் வருத்தத்துடன் அறிவித்தார்.

தந்தையின் மறைவு செய்தி குடும்பத்தினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து, சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் அவரது மனைவி, நடிகை கியாரா அத்வானி உடனடியாக டெல்லிக்குச் சென்று இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினர்.
மேலும், தந்தையை நினைவுகூர்ந்து வெளியிட்ட உருக்கமான பதிவில் சித்தார்த், “அவர் நேர்மையும் ஒழுக்கமும் கொண்ட அரிய மனிதர். எதற்கும் தளராத மதிப்புகளுடன் வாழ்ந்தவர்.
முரட்டுத்தனம் இல்லாத கட்டுப்பாடு, அகந்தை இல்லாத பலம், அவை அனைத்தும் அவரின் அடையாளங்கள். வாழ்க்கை எத்தனை சோதனைகள் வைத்தாலும் அவர் எப்போதும் நேர்மறையாகவே இருந்தார்.
அப்பா, உங்களின் நேர்மையே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய சொத்து” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.மேலும், சுனில் மல்ஹோத்ரா வணிகக் கடற்படையில் கேப்டனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது குடும்பத்தினருடன் டெல்லியில் தங்கியுள்ள சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Your honesty my asset Grief over loss his father Sadness Sidharth Malhotra family