'அன்பின் அடையாளம் நீங்கதான்' - பிரபல நடிகைரை புகழ்ந்த கமல்ஹாசன்! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற 'ஜவான்' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், கடந்த30 ஆண்டுகளாக ஷாருக்கான் அன்பின் அடையாளமாக திகழ்கிறார் என பேசினார்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான படம் 'ஜவான்'. இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்பட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

அனிருத் இசை அமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. 

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஷாருக்கான், அட்லீ, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் நடிகர் கமலஹாசன் காணொளி வாயிலாக ஷாருக்கான் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார். காணொளி மூலம் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, ''நான் இந்த விழாவில் பங்கேற்க விரும்பினேன். 

ஆனால் முடியவில்லை. இந்திய சினிமாவின் திறமையாளர்களை இந்த படம் ஒருங்கிணைத்துள்ளது. ஷாருக்கான் கடந்த 30 ஆண்டுகளாக அன்பின் அடையாளமாக திகழ்கிறார். 

கடினமான காலகட்டங்களில் கூட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உங்களின் புன்னகை ஒளியாய் திகழ்கிறது. இந்த படமும் நீங்களும் வெற்றி அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் எல்லாவற்றையும் கண்ணியத்துடன் கையாளும் விதம் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது'' என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

You are the sign love Kamal Haasan praised the famous actress


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->