மண்டேலா படத்திற்கு தேசிய விருது.. முன்பே கணித்த யோகி பாபு.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கும், ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கி, பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது. 

நேற்று 68-வது தேசிய திரைப்பட விழா நடைபெற்றது. இதில், சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இசை, இயக்கம், வசனம் உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மண்டேலா திரைப்படத்திற்கு சிறந்த வசனம் மற்றும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது. இது குறித்து அப்படத்தின் கதாநாயகன் நடிகர் யோகி பாபு கூறியதாவது, மண்டேலா படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்திற்காக மொத்த பட குழுவினரும் கஷ்டப்பட்டோம். அதற்கு பலன் கிடைத்துள்ளது. 

முதலில் இந்த படம் பெரிய அளவில் பிரபலமாகாமல் இருந்தது. ஓ.டி.டியில் வெளியானதும் உலகம் முழுவதும் நிறைய பேரை இந்த படம் சென்றடைந்தது. இன்னும் கிராமத்தில் வசிக்கும் பலரை இந்த படம் சென்று அடையவில்லை என்ற மன வருத்தம் உள்ளது. தேசிய விருது பெற்றதன் மூலம் படம் பலருக்கும் தெரிய வந்திருக்கும். 

சாதாரண நகைச்சுவை நடிகரான என்னை நடிக்க வைத்து படத்திற்கு தேசிய விருது பெற வைத்துள்ள இயக்குனர் அஸ்வின் திறமையான இயக்குனர் ஆவார். தேசிய விருது திரையுலகினருக்கு முக்கியமான விருது. உங்களுக்கு விருது கிடைக்கும் என்று இயக்குனரிடம் முதலிலேயே நான் சொன்னேன். அது நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogi Babu says National Film Award for Mandela


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->