ஜன நாயகன் இசை வெளியீட்டில் விஜய் குடும்பம் பங்கேற்பார்களா? இயக்குநர் ஜேசன் சஞ்சய் ’ஜன நாயகன்’ ஆடியோ லான்ச்க்கு வருவாரா?
Will Vijay family participate in the audio launch of Jananayagan Will director Jason Sanjay come to the audio launch of Jananayagan
விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி திரைப்படமான ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த விழாவில் விஜய்யின் மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா ஆகியோர் பங்கேற்பார்களா என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் புலி, பிகில், மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் சங்கீதா விஜய் அவ்வப்போது பங்கேற்றிருந்தாலும், மகன் மற்றும் மகள் பொதுநிகழ்ச்சிகளில் அரிதாகவே தோன்றியுள்ளனர்.
விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக கருதப்படும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா, இந்த முறை சென்னையில் அல்லாமல் மலேசியாவில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தளபதி ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் முன்கூட்டியே மலேசியாவுக்கு புறப்பட்டு விட்டனர். “ஒன் லாஸ்ட் டைம்” என்ற உணர்வுடன் நடைபெறவுள்ள இந்த விழாவில், விஜய்யின் குடும்பத்தினர் முழுமையாக பங்கேற்பார்களா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
இதற்கிடையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டீசர் 10 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பாவைப் போலவே மகனும் யூடியூப் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமையாக பதிவிட்டு வருகின்றனர்.
மலேசியாவில் நடைபெறும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். ஜெயிலர் 2 படத்தை இயக்கும் நெல்சன், இயக்குநர் அட்லி, நடிகை பூஜா ஹெக்டே, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் மலேசியாவுக்கு புறப்பட்டுள்ள தகவல்கள் வைரலாகி வருகின்றன. இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இந்த விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இயக்குநராக புதிய பயணத்தை தொடங்கியுள்ள ஜேசன் சஞ்சய், மலேசியாவில் நடைபெறும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பாரா என்பதே ரசிகர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது. விஜய் தனது தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் உறவினர்களுடன் தனி விமானத்தில் மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், சங்கீதா விஜய், திவ்யா சாஷா, ஜேசன் சஞ்சய் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டால், விஜய் குடும்பம் குறித்த நீண்ட கால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிகழ்வாக அது அமையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Will Vijay family participate in the audio launch of Jananayagan Will director Jason Sanjay come to the audio launch of Jananayagan