வாரி கொடுத்த ஜோதிகாவை பாராட்டி தள்ளிய அமைச்சர் விஜயபாஸ்கர்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பெண்கள் உரிமை சார்ந்த கருத்துக்களை முன்வைத்து நடித்து வரும் நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு திரைப்படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் அனுமதிக்கப்பட்ட தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை அறிந்த அவர் தமிழகத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு பள்ளிகள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்த சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில் தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார். மேலும் அந்த மருத்துவமனையில் உள்ள குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்காக குறிப்பிட்ட  தொகையை யும் வழங்கியுள்ளார். 

தமிழக சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஜோதிகாவின் நிதியுதவி குறித்து கலந்து ஆலோசித்து, தஞ்சை மிராசுதார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் மருது துரை ஒப்புதலின் அடிப்படையில் இந்த உதவிகள் அகரம் அறக்கட்டளை மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

ஜோதிகா சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் .சரவணன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கினார். இதை தொடர்ந்து நடிகை ஜோதிகாவின் நிதியுதவிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vijaybaskar wishes jothika for donation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->