நடிகைக்கு ஒரு நியாயம்: எனக்கு ஒரு நியாயமா? - கொந்தளிக்கும் விஜயலட்சுமி!  - Seithipunal
Seithipunal


லியோ திரைப்படத்தில் திரிஷாவுடன் நடித்தது தொடர்பாக மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது. 

இதற்கிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் நடிகர் சங்கம் இமாலய தவறை செய்துள்ளதாக தெரிவித்தார். 

இது தொடர்பாக நடிகை விஜயலட்சுமி இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது, நடிகை திரிஷாவை குறித்து மன்சூர் அலிகான் சொன்ன கருத்துக்கள் தமிழிசை சவுந்தர்ராஜன் அம்மா வரைக்கும் போயிடுச்சு. 

அதுமட்டுமா குஷ்பூ மேடம் மகளிர் ஆணையத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வைப்பதாக தெரிவித்தார். அடேங்கப்பா பெண்களுக்கு இவ்வளவு பாதுகாப்பாக இருக்காங்கப்பா. ஆனால் ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை. 

நானும் வீரலட்சுமியும் வந்து சீமான் மீது புகார் அளித்தோம் இல்லையா. அப்போது சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் என்னையும் வீரலட்சுமியும் தகாத வார்த்தைகளில் பேசினர். 

இதனால் மனவேதனை அடைந்து நான் குஷ்பூ மேடமுக்கு வீடியோ மூலம் சீமான் மீது நடவடிக்கை எடுக்க சொன்னேன். ஆனால் குஷ்பூ மேடம் அதனை கண்டுக்கவில்லை ஏன். 

ஒரு வேலை பா.ஜ.கவுக்கு ஒரு பிரச்சனை என்றால் சீமான் வந்து குரல் கொடுக்கிறார் அந்த நன்றியா இருக்குமோ என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vijayalakshmi speech goes viral


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->