பாடப்புத்தகத்தில் ''விஜயகாந்த்'' பற்றிய தலைப்புகள்: பிரபல நடிகர் கோரிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென இடத்தை பிடித்த கேப்டன் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார்.

தமிழகம் முழுவதும் உள்ள மக்களை இவரது மறைவு பெரிதும் பாதித்த நிலையில் இவரது உடலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். 

அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் நேரில் சென்றும், சமூக வலைத்தளம் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். 

இவரது உடல் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை உடன் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்று முதல் பல்வேறு பிரபலங்களும், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரும் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இதனை அடுத்து நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக சென்னை காமராஜ் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரங்கல் கூட்டத்தில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டு விஜயகாந்த் குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, 'அனைவரும் இறந்த பிறகு கடவுளாக மாறுவார்கள். ஆனால் கேப்டன் விஜயகாந்த் வாழும்போது கடவுளாக இருந்தவர். 

எனக்கு ஒரே ஒரு கோரிக்கை மட்டும் தான். பள்ளி பாட புத்தகத்தில் கேப்டன் விஜயகாந்த் குறித்து வரவேண்டும். வேறு எதற்காகவும் இல்லை. மனிதன் எப்படி இருக்க வேண்டும் என் சின்ன ஒரு தலைப்பில் இருக்க வேண்டும். 

மனிதன் இப்படி வாழ்ந்தால் மக்கள் மனதில் நிலைத்திருப்பார் அப்படி சொன்னாலே போதும் சத்ரியனுக்கு சாவில்லை' என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayakanth Topics Textbook Famous Actor Request


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->