எப்படி மகளுடன் ரோமன்ஸ் செய்து நடிக்க முடியும்? விஜய் சேதுபதியின் சிறப்பான சம்பவம்! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'உப்பெனா' திரைப்படத்தில், நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு தந்தை கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது.

இந்நிலையில், இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் எழுதிய 'லாபம்' திரைப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டியை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால், தான் மறுத்ததாகவும் பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

விஜய் சேத்துப்பதியின் அந்த பேட்டியில், "நான் தெலுங்கில் உப்பெனா படத்தில் கீர்த்தி செட்டிக்கு அப்பாவாக நடித்திருந்தேன். 

அந்தப் படத்திற்குப் பிறகு தமிழில் நான் ஒப்பந்தம் செய்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி கீர்த்தி ஷெட்டிக்கு நாயகனாக நடிக்க வேண்டும் என்று படக்குழு விருப்பம் தெரிவித்தது.

கீர்த்தி ஷெட்டிக்கு அப்பாவாக நடித்த விட்டு, அவருடன் என்னால் ரொமான்ஸ் செய்ய முடியாது என்று கூறி மறுத்துவிட்டேன்.

மேலும், உப்பன்னா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், கீர்த்தி ஷெட்டி நடிக்க தயங்கினார். அப்போது நான், 'உனக்கு எனது மகள் வயது இருக்கும். என்னை அப்பாவாக நினைத்து நடி' என்றேன்.

நானும் கீர்த்தி ஷெட்டியை மகளாகத்தான் பார்க்கிறேன். எனவே அவரை தயவு செய்து கதாநாயகி தேர்வு செய்ய வேண்டாம் என்று படக்குழுவிற்கு தெரிவித்தேன். எனது மகள் வயதிருக்கும் கீர்த்தி ஷெட்டியை, நான் எனது மகளாகவே பார்க்கிறேன்" என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த நெகிழ்ச்சியான பேட்டி தற்போது சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.

தமிழில் ஜெயம் ரவி உடன் நடிகை கீர்த்தி ஷெட்டி ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதேபோல், நடிகர் விஜய் சேதுபதி ஜாவனுக்கு பிறகு, தனது ஐம்பதாவது படமான மகாராஜாவில் நடித்து வருகிறார்.

மேலும் விஜய் சேதுபதி நடிக்கும் ஹிந்தி திரைப்படமான 'மேரி கிறிஸ்மஸ்' விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Sethupathi Krithi Shetty issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->