பிரபல ஐபிஎல் அணியை கிண்டல் செய்த விஜய் மல்லையா..!! கொந்தளித்த ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


ப்ரல் மாதம் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான கப்பை வெல்வதற்காக அனைத்துப் போட்டிகளும், தீயாக உழைத்து, கடுமையாக பயிற்சி பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெங்களூர், டெல்லி, பஞ்சாப் அணிக்கு இந்த ஐபிஎல் மிகவும் முக்கியமான போட்டியாகவே கருதப்படுகிறது. ஏனெனில் இம்மூன்று அணிகளும் இதுவரையிலும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.

எனவே, இது மூன்று அணிகளுக்கும் கௌரவப் பிரச்சனையாக இருக்கின்றது. எப்படியாவது தன் அணியை கப்பை வாங்கிவிட வேண்டும் என்று கோடிக்கணக்கில் செலவழித்து வெளிநாட்டு வீரர்களை வளைத்து வைத்துள்ளனர். நடப்பதை எல்லாம் பார்த்தால் இந்த முறை ஐபிஎல் போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் லோகோவை ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் திடீரென்று நீக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து, தற்போது அணியின் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற பக்கங்களில் புதிய லோகோவுடன் கூடிய புரோபைல் பிக்சர், கவர் பிக்சர் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதனை கிண்டல் செய்யும் விதமாக விஜய் மல்லையா ட்வீட் செய்துள்ளார். புதிய அத்தியாயம் தொடங்குகிறது என ஆர்சிபி அணி வெளியிட்ட வீடியோவில் கமெண்ட் செய்துள்ள மல்லையா, "நல்லது. ஆனால் கோப்பையை வெல்லுங்கள்" என தெரிவித்துள்ளார். மேலும், மற்றொரு பதிவில் "சிங்கம்போல கர்ஜியுங்கள். ஆனால் ஐபிஎல் கோப்பையை சொந்த வீடான பெங்களூருக்கு கொண்டு வாருங்கள்" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay mallya tweet about rcb logo


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal