கோலிவுட், பாலிவுட் எல்லாத்தையும் அடித்து நொறுக்கிய தளபதி விஜய்.! எல்லை மீறும், ரசிகர்களின் அலப்பறை.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபல நடிகராக இருக்கும் விஜய் கடந்த ஜூன் 22ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அவரது புகழை போஸ்டராக ஒட்டியும், சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

அதில் மதுரை மாவட்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றில் கேரளாவைப் போல நேர்மையாகவும், ஆந்திராவை போல மக்களுக்கான அரசாகவும், டெல்லியை போல ஊழலற்ற அரசாங்கமாகவும் ஆட்சி செய்து தமிழகத்தை சிறப்பிக்க வாங்கையா வாத்தியார் ஐயா, வரவேற்க வந்தோமய்யா, உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோமய்யா." என்று போஸ்டர் ஒட்டி இருக்கின்றனர்.

மேலும், விஜய்யின் ரசிகர்கள் ட்விட்டர் வலைத்தளத்தில் #தளபதிநாளையஅதிபதி என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

அதில் விஜய் பாலிவுட், டோலிவுட் ,கோலிவுட், மோலிவுட் என அனைத்து ஸ்டார்களும் வாழ்த்துவது போல புகைப்படத்தை பதிவிட்டு அவரது புகழைப் பாடி வருகின்றனர். இதனை கண்ட மற்ற நடிகர்களின் ரசிகர்கள் 'இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay fans cut out banner most exciting 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal