போலீசாரிடம் சிக்கிய தற்கொலைக் கடிதம் - விஜய் ஆண்டனியின் மகள் எழுதியிருப்பது என்ன? - Seithipunal
Seithipunal


போலீசாரிடம் சிக்கிய தற்கொலைக் கடிதம் - விஜய் ஆண்டனியின் மகள் எழுதியிருப்பது என்ன?

இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, இன்று அதிகாலை மூன்று மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த அவர் கடந்த சில நாட்களாகவே கடுமையான மன உளைச்சலில் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

இந்தச் செய்தி தமிழ் திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் நேரில் சென்று விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஏராளமானோர் சமூக வலைதள பக்கங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

அந்தக் கடிதத்தில் 'Love you all… Miss you all என்று தொடங்கி,  தனது குடும்பம் இல்லாமல் தான் தவித்துப் போவேன் என்றும், தனது குடும்பமும் தான் இல்லாமல் தவித்துப்போகும்" என்று அவர் எழுதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay andani daughter meera write letter before sucide


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?
Seithipunal
--> -->