வெளியானது விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், மகிழ்த்திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'. அனிருத் இசையமைக்க்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, தற்போது இந்தப் படத்தின் போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. 

அதாவது, ஆரவ்வின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர். இதற்கு முன்னதாக ஆரவ், கலகத்தலைவன், சைத்தான், ஓ காதல் கண்மணி, சிந்துபாத், மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இந்தப் படங்களில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கதாநாயகனாகவும், கலகத்தலைவன் படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vidamuyarchi movie new poster published


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->