வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் அப்டேட்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஃக்ளைம்ஸ் வீடியோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வளம் வருபவர் சிம்பு. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிம்பு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஃக்ளைம்ஸ் வீடியோ வரும் டிசம்பர் 10ஆம் தேதி 1.26 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Venthu thaninthathu kadu glimpse video update


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal