விவேக் மறைவு.. வடிவேலு வெளியிட்ட வீடியோவால் மிகுந்த அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


தனது நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் நடிகர் விவேக். இவருடைய கருத்து மக்களிடையே கொண்டு சேரும் விதமாக தனது நடிப்பால் உணர்த்தியதால் அவர் சின்ன கலைவாணர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

நேற்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 04.35 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கின்றார். இவருடைய மறைவுக்கு அவரது ரசிகர்களுக்கும், திரை பிரபலங்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

தற்போது அவருடைய உடல் சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இத்தகைய சூழலில், நடிகர் விவேக்கின் மறைவிற்கு நகைச்சுவை நடிகரான வடிவேலு தனது இரங்கலை தெரிவித்து சோகமாக அழுது ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். இதை கண்ட ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

விவேக்கின் மறைவு சோகத்தை கொடுத்தாலும் வடிவேலுவின் உடல் மெலிந்து ஆரோக்கியம் இழந்து இருப்பதை கண்ட ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திடகாத்திரமாக இருந்த ஒரு மனிதர் தற்போது இப்படி இளைத்த உடல் பலவீனம் அடைந்த நிலையில் இருப்பதை பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vadivelu sad about vivek death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal