வாடிவாசல் படத்தின் முக்கிய அப்டேட் - என்னன்னு தெரியுமா?
vadivasal movie update
பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். தற்போது இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் 2 -ம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் வருகிற 20-ந் தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையே இயக்குனர் வெற்றி மாறன் நடிகர் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' என்ற படத்தை இயக்க திட்மிட்டிருந்தார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது. ஆனால் படப்பிடிப்பு பணிகள் தொடங்காமால் தாமதமாகி கொண்டு இருந்தது. தற்போது நடிகர் சூர்யா ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் 'வாடிவாசல்' படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் முற்கட்ட பணிகள் மதுரையில் தொடங்க உள்ளதாகvum, விரைவில் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.