"வடக்கன்" படத்திற்கு வைக்கப்பட்ட முறையான ஆப்பு!  - Seithipunal
Seithipunal


ரிலீசுக்கு தயாராக இருந்த வடக்கன் திரைப்படத்தின் தலைப்பு சர்ச்சையானதால், தற்போது ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில், வடக்கன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தில் நாயகனாக குங்கும ராஜ், நாயகியாக வைரமாலா என்பவரும் அறிமுகமாகியுள்ளார். மேலும்  கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே ஜனனி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நாகூரன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

அண்மையில் இருந்த படத்தின் டீசர் வெளியாகி பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தது. அதே சமயத்தில் வடக்கன் என்ற தலைப்பு தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை அவமானம் செய்வதாகவும், வடக்கில் உள்ள இந்திய மக்களை  அவமரியாதை செய்வதாகவும் அமைந்ததாக சர்ச்சை எழுந்தது.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் வருகின்ற 24-ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வடக்கன் படத்தின் தலைப்பை சென்சார் போர்டு அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக வடக்கன் படத்தின் தலைப்பையும், ரிலீஸ் தேவதையும் மாற்ற பட குழு முடிவு செய்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vadakkam movie title change release date


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?




Seithipunal
--> -->