ஓடாத படத்திற்குதான் சக்சஸ் மீட்டிங் - வைரலாகும் நடிகர் சசிகுமார் பேச்சு.! - Seithipunal
Seithipunal


நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கருடன். வெற்றிமாறன் எழுத்தில், துரை செந்தில்குமார் இயக்கிய இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்தப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டிங் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சசிகுமார், "இயக்குனர் சக்சஸ் மீட்டிங் என்று சொன்னார். சக்சஸ் மீட்டிங் என்று சொல்லாதீர்கள், நன்றி மீட்டிங் என்று சொல்லுங்கள். ஏனென்றால், சக்சஸ் மீட்டிங் வைத்தால் படம் சரியாக ஓடாது என்று சொல்கிறார்கள். ஓடாத படத்திற்குதான் சக்சஸ் மீட்டிங் வைப்பார்கள் என்கிறார்கள். அது ஏனென்றால், ஒரு பயம். தோல்வி என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிடும்.

தோல்வியை ஒத்துக்கொள்ளமாட்டேன் என்கிறார்கள். ஒத்துக்க வேண்டும். அதை ஒத்துக்கொண்டால்தான் அடுத்த படத்தில் வெற்றி பெற முடியும். தோல்வியை ஒத்துக்கொண்டால்தான் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியும். இப்ப நன்றி என்று மாற்றிவிட்டார்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளது. சூரிக்காக இந்த படத்தில் நடிக்க வந்தேன். ஒரு நல்லது பண்ண வந்தேன். 

அது இப்ப எனக்கு நல்லதாகி விட்டது. இனி யாரும் அவரை புரோட்டா சூரி என்று சொல்லமாட்டார்கள். அதையெல்லம் அழித்துவிட்டார். கதையின் நாயகனாகதான் இருப்பார். கதையின் நாயகனாக இருக்கும் வரை அவர் ஜெயித்துகொண்டே இருப்பார்" என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sasikumar speech in karudan movie success meeting


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->