விமல் நடித்த ''மா.பொ.சி '' திரைப்படத்தின் பெயர் மாற்றம்! வைரலாகும் போஸ்டர்.! 
                                    
                                    
                                   Vimal movie name changed
 
                                 
                               
                                
                                      
                                            இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தின் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு ''மா.பொ.சி'' (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என படக் குழுவினர் பெயரிட்டனர். 
எஸ்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 
இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பெயரை பட குழுவினர் மாற்றி அமைத்துள்ளனர். 

அதாவது மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என்ற திரைப்படத்தின் தலைப்பு தற்போது ''சார்'' என மாற்றப்பட்டுள்ளதாக இயக்குனர் போஸ் வெங்கட் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். 
இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.