பணத்திற்காக என்னை விட்டுக் கொடுக்காதவர் செந்தில் - 'கருடன்' பட இயக்குனர் குறித்து சூரி நெகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


நடிகர் சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் "கருடன்". இப்படத்தை இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கி இருந்தார். இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடந்தது. அதில் பேசிய நடிகர் சூரி, "யார் வேண்டுமானாலும் கதை எழுதி, அதை படமாக எடுத்து வெளியிட்டு விடலாம். 

ஆனால் அனைவருக்கும் படம் வெளியான பிறகு இது போலொரு மேடை அமைவதில்லை. ஆனால் எனக்கு இந்த மேடை கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு நான் நாயகனாக நடத்த விடுதலை படத்திற்கும் இப்படி ஒரு மேடையில் நின்றேன். இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி வெளியிடப்பட்ட போது எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. அவர்கள் என்ன சொல்வார்கள் என்ற தவிப்பில் இருந்தேன். 

என் வாழ்க்கையில் 'விடுதலை'க்கு முன் மற்றும் 'விடுதலை'க்கு பின் என்று இரண்டு பாகங்கள் உள்ளன. என்னுடைய இந்த நிலைக்கு காரணம் வெற்றி மாறன் தான். அவருக்கு நான் என்றென்றும்  நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இயக்குனர் துரை செந்திலை பற்றி நான் கூறியே ஆக வேண்டும்.

அவருக்கும், எனக்கும் 14 ஆண்டு கால பழக்கம் உள்ளது. அவர் பணத்திற்கு ஆசைப்படாமல் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். பணத்திற்காக என்னை எங்கேயும் விட்டுக் கொடுக்காதவர் செந்தில். இந்த படத்தின் வெளியீட்டின் போது நிதி பற்றாக்குறையால் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டோம். வெளியீட்டின் போது உதவிய விநியோகஸ்தர்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன்" என்று சூரி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Soori Speech About Garudan Movie Director Senthil


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->