செல்ஃபி க்கு கெஞ்சிய ரசிகர் - தள்ளி போங்க என்று கடு கடுத்த நடிகை -நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த "ஆடுகளம்" திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி பன்னு. தொடர்ந்து இவர் தமிழில் காஞ்சனா 2 மற்றும் கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் டாப்ஸி பன்னு, சமீபத்தில் ஷாருக் கானுடன் "டங்கி" என்ற படத்தில் நடித்துள்ளார். டாப்ஸி ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் கடந்த டிசம்பரில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் டாப்ஸி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சி முடிந்து அவரது காரில் ஏறுவதற்காக டாப்ஸி சென்றபோது சிலர் அவரை பின்தொடர்ந்து சென்று புகைப்படம்  எடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் அவர்கள் யாரையும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து ரசிகர் ஒருவர் டாப்ஸியிடம் சென்று ஒரு செல்ஃபி எடுக்க கேட்டு கெஞ்சியுள்ளார் ஆனால் டாப்ஸி அவரை தள்ளி போங்க என்று கோபமாக கூறியதுடன், அவரை கண்டு கொள்ளாமல் காரில் ஏறி சென்று விட்டார். 

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில்  பலரும் டாப்ஸியின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபமாக அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் தோல்வியைத் தழுவுவதால் அவர் மன அழுத்தத்தில் இருக்கிறாரா? என்று பலரும் பதிவுகளில் கேட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fan Begging for Selfie to the Actress


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->