முதலமைச்சர் ஸ்டாலின் பயோபிக்கில் உதயநிதி நடிக்க வேண்டும் - நடிகர் வடிவேலு.! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் ஸ்டாலின் பயோபிக்கில் உதயநிதி நடிக்க வேண்டும் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி மதுரை மேனேந்தல் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

 அந்த வகையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் அமைச்சர் மூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் வடிவேலு இங்க பார்த்த புகைப்படம் எல்லாம் வெறும் படம் அல்ல. எல்லாம் நிஜம். என் நெஞ்சமெல்லாம் நெகிழ்ச்சியாக இருக்கு. இது எல்லாம் மனிதர்களுக்கும் தைரியம் தன்னம்பிக்கையை கொடுக்கும் புகைப்பட கண்காட்சியாக உள்ளது.

பல போராட்டங்களைக் கடந்து முதலமைச்சர் இந்த இடத்திற்கு வந்துள்ளார். ஒரு கலைஞராகத்தான் புகைப்பட கண்காட்சியை பார்வையிட வந்துள்ளேன். நடிகராக வரவில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்க்கை பயணம் குறித்த கதையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வேண்டும். உதயநிதி நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். இருப்பினும் அவரை கட்டாயப்படுத்தி நடிக்க வைப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanidhi to act in Chief Minister Stalin's biopic - Actor Vadivelu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->