டோவினோ தாமஸ் -நஸ்ரியா கூட்டணி! மலையாள & தமிழ் ரசிகர்களை கவரும் புதிய படம் அறிவிப்பு...!
Tovino Thomas Nazriya alliance New film announced that captivate Malayalam Tamil fans
மலையாள திரையுலகில் பிரபல ஹீரோ டோவினோ தாமஸ், ‘மின்னல் முரளி’, ‘மாரி’ உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர். மேலும், விதவிதமான கதாபாத்திரங்களில் சவால்களை ஏற்று நடிப்பதில் வல்லவர் என இவர் பெயர் பெற்றிருக்கிறார்.
மலையாளத்தைத் தாண்டி தமிழ் மற்றும் பல்வேறு மொழிப் பார்வையாளர்களிடமும் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.அண்மையில் பிரித்விராஜ் இயக்கும் ‘L2: எம்புரான்’ படத்தில் நடித்து கவனம் பெற்றுள்ளார்.

தமிழில் ‘ராஜாராணி’ படத்தின் மூலம் ரசிகர்களால் அன்போடு வரவேற்கப்பட்ட 'நஸ்ரியா நசீம்', கடைசியாக மலையாளத்தில் ‘சூக்ஷ்மதர்ஷினி’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
மேலும், உலகளவில் பெருமை பெற்ற செப்டிமஸ் விருதில், ‘நரிவேட்டை’ படத்திற்காக சிறந்த ஆசிய நடிகர் விருதை டோவினோ தாமஸ் வென்று மலையாள திரையுலகத்திற்கு கௌரவம் சேர்த்தார்.
இந்த விருது நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் வழங்கப்பட்டது.இந்நிலையில், டோவினோவின் அடுத்தப்படம் குறித்து சுவாரஸ்யமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில் நஸ்ரியா நாயகியாக நடிக்கும் இந்தப் புதிய படத்தை ‘வைரஸ்’, ‘கும்பலாங்கி நைட்ஸ்’, ‘தள்ளுமாலா’ போன்ற ஹிட் படங்களுக்கு கதை எழுதிய 'முஷின் பராரி' எழுதி வருகிறார்.
மேலும், படக்குழு தற்போது மற்ற நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்து வருகிறது.இந்த கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தற்போது கிளப்பியுள்ளது.
English Summary
Tovino Thomas Nazriya alliance New film announced that captivate Malayalam Tamil fans