ஒரே நாளில் சூரி, சந்தானம், யோகிபாபு ஹீரோவாக நடித்த மூன்று படங்கள் வெளியீடு!
Three films starring Soori Santhanam and Yogi Babu as heroes are releasing on the same day
தமிழ் சினிமாவில் நகைச்சுவை உலகை ஆட்சி செய்த விவேக், வடிவேலு போன்ற காமெடி திலகர்களுக்குப் பிறகு, சூரி, சந்தானம், யோகிபாபு ஆகியோர் ரசிகர்களின் பேரன்பை பெற்றனர். தற்போது, இம்மூவரும் தனித்தனியாக ஹீரோக்களாகவும் மின்னி வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்கள் மூவரும் நடித்த திரைப்படங்கள் ஒரே நாளில் — மே 16ம் தேதி — திரையரங்குகளில் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்:
சந்தானம் – DD Next Level
'DD Returns' திரைப்படத்திற்கு அடுத்ததாக, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள தொடர்ச்சி படம் 'DD Next Level'. இந்த ஹாரர் காமெடி படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். சந்தானத்துடன் கௌதம் வாசுதேவ் மேனன், கஸ்தூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்த படம், மே 16ம் தேதி திரைக்கு வருகிறது.
சூரி – மாமன்
'விடுதலை' படம் மூலம் ஹீரோவாக மின்னிய சூரி, தொடர்ந்து 'கருடன்', 'கொட்டுக்காளி' ஆகிய படங்களில் வெற்றி கண்டார். தற்போது அவர், 'மாமன்' என்ற புதிய படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை பிரசாந்த் முருகேஷன் இயக்கியுள்ளார். சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படமும் மே 16ம் தேதியே வெளியீடாகிறது.
யோகிபாபு – ஜோரா கையை தட்டுங்க
யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள 'ஜோரா கையை தட்டுங்க' திரைப்படமும் மே 16ம் தேதி வெளியிடப்படுகிறது. விநீஸ் மில்லினியம் இயக்கியுள்ள இந்த படத்தில், யோகிபாபு ஒரு மேஜிக் மேனாக நடித்துள்ளார். வாமா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜாகிர் அலி தயாரித்துள்ளார். அருணகிரி இசை அமைத்து, சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளனர்.
English Summary
Three films starring Soori Santhanam and Yogi Babu as heroes are releasing on the same day