சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. இன்று முதல் திரையரங்குகள் மூடல்.. வெளியான அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசு இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, அரியானா மாநிலம் புதிய கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி குர்கான் மற்றும் அரியானாவின் ஃபரிதாபாத், அம்பாலா, பஞ்ச்சூலா மற்றும் சோனிபட் ஆகிய மாவட்டங்களில் திரையரங்குகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் மூடப்படும். 

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 பணியாளர்களுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மால்கள் மற்றும் சந்தைகள் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். மது விற்பனை பார்கள் மற்றும் உணவகங்கள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி. மாநிலம் முழுவதும் உள்ள காய்கறிகள், பொது போக்குவரத்து, பூங்காக்கள், வழிபாட்டுத்தலங்கள், உணவகங்கள் மற்றும் பிற இடங்களில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். இந்த கட்டுப்பாடு ஜனவரி இரண்டாம் தேதி முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

theaters closed in haryana


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->