இந்திய திரைப்படங்களின் தரம் உலகளவில் உயர்ந்துள்ளது! ஜேம்ஸ் கேமரூன் பாராட்டு!! - Seithipunal
Seithipunal


ஹாலிவுட்டில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக ஜேம்ஸ் கேமரூன் இருக்கிறார். இவர் உலகளவில் வசூலை வரிக்குவித்த டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களை இயக்கியவர். இவருக்கென ரசிகர் பட்டாளம் உலகெங்கிலும் உள்ளனர்.  

இவர் இயக்கிய அவதார் படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில்,  அந்த படத்தை ஏழு பாகங்கள் வரை இயக்க அவர் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  இந்த நிலையில் இந்திய படங்களை ஜேம்ஸ் கேமரூன் பாராட்டி உள்ளார். மேலும் அவர் அவதார் படங்கள் குறித்து வெளியான தகவல்களையும் உறுதிப்படுத்தினார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு இயக்குனரை பார்த்து வியக்கிறேன். புதிய இயக்குனர்களுக்கு வரும் எண்ணங்கள் எனக்கு ஏன் வருவதில்லை என்று வருத்தப்பட்டதும் உண்டு. அந்த வகையில், கடந்த வருடம் வெளியான  ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் படம் பார்த்தேன். அற்புதமாக இருந்தது. பிரமாதமாக எடுத்து இருந்தார். உலக அரங்கில் இந்திய சினிமா உயர்வான இடத்தை பிடித்து வருகிறது.

மேலும், அவதார் படத்தின் ஐந்து பாகங்களுக்கான கதையை எழுதி விட்டோம். இதை ஏழு பாகங்கள் வரை எடுக்க திட்டம் உள்ளது'' என்றார். முன்னதாக, ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றபோதும் ராஜமவுலியை ஜேம்ஸ் கேமரூன் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The quality of Indian movies has risen worldwide! Kudos to James Cameron!!


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->