சத்தமில்லாமல் விஷ்ணு விஷால் செய்யப் போகும் விஷயம்.! குவியும் பாராட்டுக்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு என்ற விளையாட்டு சம்பந்தமான திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் இவர். ஜீவா ராட்சசன் போன்ற வெற்றி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இளம் வயதில் கிரிக்கெட் வீரராக இருந்த இவர் ஒரு விபத்தின் காரணமாக கிரிக்கெட்டை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் அதன் பிறகு நடிகரானவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

திரைப்படத்தில் நடித்து வந்தாலும்  விளையாட்டு வீரர்களுக்கு அவ்வப்போது உதவுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஷ்ணு விஷால். தற்போது இவரைப் பற்றிய ஒரு செய்தியை சமூக ஊடகங்களில்  வெளியாகி பாராட்டுகளை பெற்று தந்திருக்கிறது.

11 தடகள  வீரர், வீராங்கனைகளுக்கு உதவுவதாக அறிவித்திருக்கிறார் விஷ்ணு விஷால். அதன்படி மாதம் தோறும் அவர்களுக்கு உதவி தொகை வழங்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். மேலும் இது போன்ற உதவிகளை நீண்ட காலம் தொடர்ந்து வழங்குவதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The leading actor who continues to help sportspersons is heaping praises


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->