“தி கேர்ள் ஃபிரெண்ட்” ரிவ்யூஸ்! – ராஷ்மிகா மந்தனா சிறப்பான நடிப்பு!படம் எப்படி இருக்கு?.. ஹிட்டா? ஃப்ளாப்பா?
The Girlfriend Reviews Rashmika Mandanna excellent performance How is the film Is it a hit Is it a flop
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பிலும், பாடகி சின்மயியின் கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன் இயக்கத்திலும் உருவான ‘தி கேர்ள் ஃபிரெண்ட்’ திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே அதிரடி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனாவுக்கு வெற்றி மற்றும் தோல்வி படங்கள் மாறி மாறி வந்தன.இப்போது வந்திருக்கும் “தி கேர்ள் ஃபிரெண்ட்” படம் அந்த சமநிலையை உடைத்து,“இந்த ஆண்டின் பெஸ்ட் தெலுங்கு படம் இதுதான்!” என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் ரசிகர்கள்“எக்ஸலண்ட் படம்!”“சரியான நேரத்தில் இப்படியொரு படம் வந்தது!”என்று பாராட்டுக்களை மழைபோல் பதிவு செய்து வருகின்றனர்.
சமந்தாவுக்கு ஜோடியாக “மாஸ்கோவின் காவேரி” படத்தில் ஹீரோவாக நடித்த ராகுல் ரவீந்திரன்,பல படங்களில் துணை வேடங்களில் நடித்தவர்.இப்போது அவர் இயக்கிய ‘தி கேர்ள் ஃபிரெண்ட்’, அவரின் கேரியரை திருப்பும் படமாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.“ராகுல் ரவீந்திரனின் டைரக்ஷன் ஸ்டைல் புதிய உணர்வை தருகிறது.எமோஷனும், ரொமான்ஸும் பக்கா ப்ளெண்ட்!”என்று நெட்டிசன்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.
“தி கேர்ள் ஃபிரெண்ட்” படத்தில் ராஷ்மிகா தனது நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.“ராஷ்மிகா லாட்டரி நடிகை இல்லை என்பதற்கு இந்த படம் சாட்சி!”“அவரின் ரியல் எமோஷனல் ஆக்டிங் – ஒவ்வொரு சீனிலும் goosebumps!”என்று ரசிகர்கள் உற்சாகமாக பதிவிட்டுள்ளனர்.சிலர் மேலும்,“இந்த ஆண்டில் ராஷ்மிகாவின் பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் இதுதான்!”என குறிப்பிடுகின்றனர்.
எக்ஸ் தள விமர்சனங்களின் படி, ஹைப் மீட்டர் 90 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.ரசிகர்கள் “பக்காவான தியேட்டர் மெட்டீரியல் படம்”, “மிஸ் பண்ணிடாதீங்க!” என்று கூறி வருகின்றனர்.படத்தின் இசை, பின்னணி ஸ்கோர், ராஷ்மிகா-ராகுல் காம்போ — எல்லாமே எமோஷனல் கனெக்ட் ஏற்படுத்துவதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்த ஆண்டில் ராஷ்மிகா நடித்த படங்கள்:சாவா,சிக்கந்தர்,தாமா,தி கேர்ள் ஃபிரெண்ட்இதில் “தி கேர்ள் ஃபிரெண்ட்” படம், ரசிகர்களும் விமர்சகர்களும் ஒருமித்துப் பாராட்டிய சிறந்த தெலுங்கு திரைப்படமாக திகழ்கிறது.
பாடகி சின்மயியின் கணவராகவும், திறமையான இயக்குநராகவும் மாறிய ராகுல் ரவீந்திரன்,மற்றும் தனது கேரியரை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற ராஷ்மிகா மந்தனா —இருவரின் கூட்டணி “தி கேர்ள் ஃபிரெண்ட்” மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்துள்ளது.
English Summary
The Girlfriend Reviews Rashmika Mandanna excellent performance How is the film Is it a hit Is it a flop