தளபதி 67 : விஜய் - லோகேஷ் படம் பூஜையுடன் தொடக்கம்.. படத்தில் இணைந்த முக்கிய நடிகை.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக பீஸ்ட் திரைப்படம்  வெளியாகியது. இதனை தொடர்ந்து, அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து விஜய்யின் 67வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளபதி 67 படத்திற்கு, 'ராய்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில்  வாரிசு பட சூட்டிங் முடிவடைந்துள்ளதால், தளபதி 67 அப்டேட் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து இந்தப் படத்தின் கதை உருவாக்கம் மற்றும் காஸ்டிங் வேலைகளில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் தளபதி 67 படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைப்பெற்றது. இந்த பூஜையில் பத்திரிகையாளர்கள் மற்றும் செல்போன்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன் காரணமாக திரைப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து மட்டுமே வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. 

அதேபோல், தளபதி 67 பட அறிவிப்பு டீசர் படப்பிடிப்பிற்காக பிரசாத் லேப்பில் இரண்டு செட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ரெட் டோனில் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு இந்த படப்பிடிப்பு நடைப்பெறுகிறது.

மேலும், தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathy67 movie pooja today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->