மீண்டும் வாரிசு கூட்டணியா.?! விஜயின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்.!  - Seithipunal
Seithipunal


லியோ படத்தின் படப்பிடிப்புகளில் மும்முரமாக  ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் தளபதி விஜய். மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார் விஜய். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில்  ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தயாராகிக் கொண்டிருக்கிறது. தற்போது படக்குழுவினர் காஷ்மீரில்  படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் திரைப்படத்தில் விஜயுடன் திரிஷா, மன்சூர் அலி கான்,  மிஸ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

கடந்த ஜனவரி 11-ம் தேதி  தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம்  வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. விஜய் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று 300 கோடிக்கு மேல் வசூல் செய்து  தமிழ் சினிமா உலகில் புதிய சாதனையை படைத்தது. இத்திரைப்படத்தை தெலுங்கு திரை உலகை சார்ந்ததில் ராஜு  தயாரித்திருந்தார். அஜித் குமாரின் துணிவு படத்துடன் களம் இறங்கிய இந்த திரைப்படம்  உங்களுக்கு வெளியான படங்களில் வெற்றி படமாக அமைந்தது.

தற்போது இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக  கோலிவுட் வட்டாரத்திலிருந்து வரும்  செய்திகள் தெரிவிக்கின்றன. கதை விவாதங்கள் முடிந்து விட்ட நிலையில்  இயக்குனர் வம்சி திரைப்படத்திற்கான திரைக்கதையை  எழுதி வருவதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன . இதனைத் தொடர்ந்து வாரிசு படத்தின் வெற்றி கூட்டணி  மீண்டும் இணைய உள்ளதால்  தளபதி ரசிகர்கள் புதிய அறிவிப்புக்கான  அப்டேட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு திரைப்படம் தளபதி விஜய் நடித்த திரைப்படங்களில்  ஃபேமிலி செண்டிமெண்டுகளுடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியான ஒரு திரைப்படமாக இருந்தது. இது அவரது ரசிகர்கள் மற்றும் இளைஞர்களை மட்டுமல்லாது  ஃபேமிலி ஆடியன்ஸுக்கும்  பிடித்த படமாக இருந்ததால்  மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி லியோ படத்திற்குப் பிறகு மீண்டும் இணையும் என தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thalapathy vijay to team up with vamsi and dil raju for his next project talks are going on


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->