8 லட்சம் வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தம்! 5 நாள் மட்டுமே வேலை கோரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்...!
800000 bank employees strike across country urging central government implement 5day work week
வங்கிகளில் மாதம் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகள் விடுமுறையாக இருந்தபோதிலும், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்குமாறு வங்கி ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனையடுத்து, வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தாலும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

இந்த சூழலில், இன்று (செவ்வாய்) நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு, பிராந்திய கிராம மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஏற்கனவே சனி, ஞாயிறு மற்றும் குடியரசு தினம் விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெறும் இந்த போராட்டத்தால் வங்கி சேவைகள் பெரும்பாலான இடங்களில் பாதிக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.நாகராஜன் வெளியிட்ட அறிக்கையில், “எல்.ஐ.சி நிறுவனத்தில் 100% வெளிநாட்டு நேரடி முதலீட்டை வழங்கிய மத்திய அரசின் முடிவை நாங்கள் ஏற்க முடியாது.
வாரத்தில் 5 நாள் வேலை, வேலை நேரத்தை ஒழுங்குபடுத்தல், ஓய்வூதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை நாங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். கடந்த 2024-ம் ஆண்டில் இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.ஏ.) 6 மாதத்தில் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தது; ஆனால் இதுவரை முன்னேற்றம் இல்லை.
மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட போராட்டம், அரசின் உறுதிமொழியை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தற்போது எந்த முன்னேற்றமும் இல்லாததால், ஜனவரி 27-ந்தேதி இன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்தார்.
English Summary
800000 bank employees strike across country urging central government implement 5day work week