டிவிட்டரில் அஜித் ரசிகர்கள் செய்த வேலை.! உள்ளே இறங்கும் விஜய் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படமானது மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தல 60 திரைப்படமும் இவர்களின் கூட்டணியில் உருவாக இருக்கின்றது. இந்த படத்தினை போனிகபூர் தயாரிக்க இருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் கூடுதலான சுவாரசியமான விஷயம் என்னவென்றால் போனி கபூரின் மகளும், ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெறுவதாக அஜித் ரசிகர்கள் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.

இப்படி தல 60வது திரைப்படம் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதன் காரணமாக விரைவிலேயே படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித் மிகவும் வயதான தோற்றத்தில் இல்லாமல் (சால்ட் அன்ட் பெப்பர் லுக்) இளமையான தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ரசிகர்களும் இத்துடன் போட்டிபோட்டுக்கொண்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thala60poojaday is trend on twitter


கருத்துக் கணிப்பு

ரஜினியும் கமலும் தேவைப்பட்டால் ஒன்றிணைவோம் என கூறியிருப்பது?!
கருத்துக் கணிப்பு

ரஜினியும் கமலும் தேவைப்பட்டால் ஒன்றிணைவோம் என கூறியிருப்பது?!
Seithipunal