அருங்காட்சியகத்தில் சுஷாந்த் சிங் சிலை.! குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்ட தகவல்.!  - Seithipunal
Seithipunal


பாலிவுட்டில் இளம் நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங், சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இது பாலிவுட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலிவுட் சினிமாவில் நிலவும் நெப்போட்டிஷம்தான் இதன் காரணம் எனவும், சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் சுஷாந்த் சிங் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என தொடக்கத்திலிருந்து பேசி வரும் நடிகை கங்கனா ரனாவத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. 

நடிகர் சுஷாந்தின் தற்கொலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், அவரது ரசிகர் ஒருவர் சுஷாந்த் நினைவாக மெழுகு சிலை ஒன்றை வடிவமைத்து இருக்கின்றார். மேற்கு வங்கத்தை சேர்ந்த சுசாந்தா ராய் என்றும் சிற்பிக்கு மேற்கு வங்க பகுதியில் ஒரு அருங்காட்சியகம் இருக்கின்றது. 

இந்த நிலையில், தற்போது அதில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. தற்பொது அந்த மெழுகு சிலையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதுகுறித்து அதனை உருவாக்கியவர்,"எனக்கு நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை மிகவும் பிடிக்கும். எனவே தான் அவரது மெழுகு சிலையை உருவாக்கினேன். அவரது குடும்பத்தினர் கேட்டால் மற்றொரு சிலை தயாரித்து கொடுக்கவும் நான் தயாராக இருக்கின்றேன்" என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sushanth singh statue on west bengal


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal