சூர்யா 45 படத்தின் புதிய இசையமைப்பாளர் யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, கங்குவா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'சூர்யா 45' என்ற படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார்.

இந்தப் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானபோதே ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஏ.ஆர்.ரகுமான் சூர்யா 45 படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், புதிய இசையமைப்பாளரை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'சூர்யா 45' படத்திற்கு கட்சி சேர, ஆச கூட ஆல்பம் பாடல் பிரபலம் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார்.

இவர், தற்போது லோகேஷ் கனகராஜின் சினிமா யுனிவெர்ஸின் கீழ் உருவாகி வரும் பென்ஸ் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இது இவர் சினிமாவில் இசையமைக்கும் முதல் படமாகும். தற்போது பென்ஸ் படத்தை தொடந்து 'சூர்யா 45'-க்கும் சாய் அபயங்கர் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

surya 45 movie new music director update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->