நடிகர் அஜித்குமாருக்கு அறுவை சிகிச்சை - அதிர்ச்சியில் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருடன் இணைந்து திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வந்தார். இந்த படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் மே மாதம் திரைக்கு வரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் அஜித் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஜித் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை வீடு திரும்புவார் என்றும் அவரது மேலாளர் தெரிவித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமாருக்கு மூளையில் சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்காக நிபுணத்துவம் பெற்ற சிறப்பு மருத்துவர்கள் மதுரை, கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டது. 

இதையடுத்து, அவரது மூளையில் இருந்ததாக கூறப்பட்ட கட்டி அகற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, நடிகர் அஜித்குமார் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

surgery to actor ajith kumar in chennai appollo hospital


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->