பொங்கல் நாளில் விடிய, விடிய ஆரம்பித்த ஸ்டாலின்.! வைரலாகும் ட்வீட்டர் போஸ்ட்.!  - Seithipunal
Seithipunal


உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் திருவிழாவாக தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ‌ திகழ்கிறது. தமிழர் இன வரலாற்றில் தமிழினம் தோன்றிய காலத்திலிருந்து அறுபடாத பண்பாட்டுத் தொடர்ச்சி பெருவிழாவாகப் பொங்கல் திருநாள் விளங்குகிறது என்பதை நம் மொழியின் பழம்பெரும் இலக்கிய இலக்கண ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

தை ஒன்றாம் தேதியான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

மக்களிடம் பொறுமையாக பேசுங்கள் - உடன்பிறப்புகளுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை.!  - Seithipunal

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், " அனைவருக்கும் #தைப்பொங்கல் - #தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்! கழக அரசு அமைந்ததும், ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்தினர் நலம்காக்க விவசாயக் கடன், நகைக் கடன், கல்விக் கடன் தள்ளுபடி உறுதி என்ற உவப்பான செய்தியுடன் எனது வாழ்த்தை உரித்தாக்குகிறேன்! இருள் விலகி ஒளி பாயட்டும்!" என்று தெரிவித்துள்ளார். 

அறிவாலயம் விரைந்த ஸ்டாலின்! வெற்றிக்கு பின்னர் சொன்னது என்ன?! - Seithipunal

முன்னதாக பாராளுமன்ற தேர்தலில் அதிகாரத்தில் இல்லாமலேயே இதுபோன்ற கடன்கள் தள்ளுபடி என்று பொய்யான வாக்குறுதிகள் பலவற்றை வாரி இறைத்து வாக்குகளைப் பெற்றுக் குவித்தது திமுக. 

இதை அரசியல் விமர்சகர்கள் பலரும் மக்களை இதுபோன்ற இனிப்பான பொய்களை கூறி மக்களை ஸ்டாலின் ஏமாற்றிவிட்டார் என்று விமர்சித்து வந்த நிலையில், பொங்கல் திருநாளில் கல்விக்கடன், நகை கடன் தள்ளுபடி என்ற உறுதிமொழியை ஸ்டாலின் தெரிவித்தவுடன் "விடிய விடிய ஸ்டாலின் ஆரம்பித்து விட்டார்." என்று இணையத்தில் நக்கல் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

stalin wishes to thai thirunal


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->