"கனவில் கூட போலீஸ் ஸ்டேஷன் தான் வருது." கதறும் சூரி.. இது தான் காரணமா?! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னாடி நகைச்சுவை நடிகராக சூரி இருக்கிறார். இவர் அடையாறு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் சிறுசேரி பகுதியில் இடம் வாங்கி தருவதாக விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டிஜிபிமான ரமேஷ் கொடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் உள்ளிட்டோர் ரூபாய் 2.70 கோடி ஏமாற்றிவிட்டதாக தெரிவித்திருந்தார். 

இது குறித்த புகாரை ரமேஷ் கொடவாலா மறுத்துள்ளார். இந்த மனு குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ஆறு மாதம் அவகாசம் கொடுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா விசாரித்து வருகின்றார். 

சூரியிடம் கடந்த ஏப்ரல் மாதத்தில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த வீடியோவும் பதிவாகியது தொடர்ந்து ரமேஷ் தொடர்பாலா அன்பு வேல்ராஜ் இருவரிடமும் விசாரணை நடந்தது. ஆனாலும், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என சூரி மனு தாக்கல் செய்தார். 

6 மாதங்களுக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இத்தகைய நிலையில், நடிகர் சூரி சமீபத்தில் கனவில் கூட தனக்கு வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் தான் நினைவுக்கு வருவதாக கூறியுள்ளார். 

மேலும், முன்பெல்லாம் வீட்டை விட்டு சென்றால், அவரது குழந்தைகள் ஷூட்டிங் செல்கிறீர்களா என்று கேட்பார்களாம். ஆனால், இப்போதெல்லாம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போறீங்கலா என்று கேட்கிறார்களாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

soori about vepperi police station


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal