சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ட்ரெய்லர் நாளை வெளியாகிறது!! - Seithipunal
Seithipunal


சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள மாவீரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ஜூலை 2 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது.

தெலுங்கில் மாவீருடு என்ற பெயரில் இந்த படம் வெளியாகவுள்ளது. வரும் ஜூலை 14 ஆம் தேதி அன்று இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவீரன் படத்தில் ட்ரெய்லர் நாளை ( ஜூலை 2ம் தேதி ) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். ஏற்கனவே வெளியான மாவீரன் பட பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyans Maveeran trailer is out tomorrow


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->