சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.! - Seithipunal
Seithipunal


திரைத்துறையில் கடுமையான உழைப்புக்கும், வலிக்கும் உள்ளாகி வந்த நடிகரில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவா என்றும் சிவகார்த்தி என்றும் ரசிகர்களால் அழைக்கப்படும் சிவாவுக்கு விஜய் தொலைக்காட்சி கொடுத்த அங்கீகாரத்தால் இன்று தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகிவிட்டார்.

மெரினா, வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் தொடங்கி இன்று டாக்டர் படம் வரை என பல படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், திரைப்பட தயாரிப்பாளராகவும் வளர்ந்துள்ளார். அவரது முதல் தயாரிப்பு படமான கனா பலரின் கவனத்தை பெற்று பெரும் பாராட்டுகளை அள்ளித்தந்தது. 

சமீபத்தில் இவரது நடிப்பில், டாக்டர் மற்றும் டான் உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.அடுத்ததாக, தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் நடிக்கின்றார். சமீபத்தில், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan Prince release Date viral


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal