''சைரன்'' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்: வைரலாகும் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சைரன்'. சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 

மேலும் இதில் யோகி பாபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பொருட்செலவில் குடும்ப அம்சங்களுடன் ஆக்சன் திரில்லராக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். 

ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு செல்வகுமார் எஸ்.கே. ஒழிப்பதிவு செய்துள்ளார். 

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட் குறித்து வெளியாகி உள்ளது. 

அதாவது, 'சைரன்' திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siren movie release update


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->